இமயமலை பயணத்தை நிறைவு செய்த ரஜனிகாந்த் | விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் | 2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் |
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் ஓரளவுக்கு குறைந்துள்ள நிலையில் கடந்த ஒரு மாதமாக திரையரங்குகள் திறக்கப்பட்டு படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனாலும் கூட 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மிகப்பெரிய படம் ஏதாவது வெளியாகி ரசிகர்களை வழக்கம்போல தியேட்டருக்கு வரவழைக்கும் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
பாலிவுட்டில் அக்சய் குமார் நடிப்பில் வெளியான பெல்பாட்டம் படத்திற்கும் இதே நிலைதான். இந்த நிலையில் தெலுங்கில் நாக சைதன்யா சாய்பல்லவி இணைந்து நடித்துள்ள லவ் ஸ்டோரி திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக முதல்நாளிலேயே 11.1 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது லவ் ஸ்டோரி திரைப்படம். இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் அக்சய்குமாரின் பெல்பாட்டம் படம் கூட முதல்நாளில் 3.55 கோடி மட்டுமே வசூலித்து இருந்தது. அதேசமயம் கடந்த வாரம் வெளியான கோபிசந்த் தமன்னா நடித்த சீட்டிமார் திரைப்படம் ஒரே நாளில் 5 கோடி வசூல் செய்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.