நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மலையாள திரையுலகில் மோகன்லால், மம்முட்டிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் நடிகர் திலீப்.. இவரும் நடிகை மஞ்சுவாரியரும் 1998ல் காதல் திருமணம் செய்துகொண்டனர்.. இவர்களுக்கு மீனாட்சி என்கிற மகளும் இருக்கிறார். இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2௦15ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர் இந்த விவாகரத்திற்கு முக்கிய காரணமாக கிசுகிசுக்கப்பட்ட நடிகை காவ்யா மாதவனை கடந்த 2016 நவம்பரில் இரண்டாவது திருமணம் செய்தார் நடிகர் திலீப்.
இதையடுத்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் இவர்களுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது.. இதற்கு மகாலட்சுமி என பெயர் சூட்டினார்கள். கடந்த 2019ல் குழந்தையின் முதல் பிறந்த நாளை ஒட்டி அந்த கொண்டாட்டத்தின்போது ஒருமுறை அதனுடைய முகத்தை வெளியுலகிற்கு காட்டினார்கள்.
தற்போது அந்த குழந்தைக்கு இரண்டு வயதாகி அழகான சிறுமியாக நன்கு வளர்ந்துள்ள நிலையில் தாங்கள் நால்வரும் குடும்பமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் நடிகர் திலீப். என்னதான் சின்னம்மா என்றாலும் திலீப்பின் முதல் மகளையும் (மீனாட்சியை) காவ்யா மாதவன் ரொம்பவே பாசத்துடன் அரவணைத்து வருகிறார் என்பது இந்த குடும்ப புகைப்படத்தில் வெளிப்படும் சந்தோஷத்திலேயே தெரிகிறது.