தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு |
துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட ஏழு நகரங்களை ஒன்றிணைத்துள்ள ஐக்கிய அரபு அமீரக அரசு, கடந்த 2019ஆம் ஆண்டில் தங்களது ஆளுகைக்கு உட்பட்ட நகரங்களில் நீண்ட நாட்கள் தங்கி வேலை பார்க்கவும், வசிக்கவும் கோல்டன் விசா வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தின. இப்படிப்பட்ட ஒரு சிறப்பு சலுகையை ஒவ்வொரு குறிப்பிட்ட துறையில் சாதித்த வெகு சிலருக்கு மட்டுமே வழங்கி வருகிறது ஐக்கிய அரபு அமீரக அரசு.
அந்தவகையில் கேரளாவின் அடையாளமாக திகழும் மலையாள முன்னணி நடிகர்களான மோகன்லால், மம்முட்டி இருவருக்கும் கோல்டன் விசா வழங்குவதாக சில நாட்களுக்கு முன் அறிவித்தது ஐக்கிய அரபு அமீரகம். இந்தநிலையில் மோகன்லால், மம்முட்டி இருவருமே துபாயில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நேரில் கலந்து கொண்டு தங்களுக்கான கோல்டன் விசாவை பெற்றுக் கொண்டனர்.