பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தெலுங்கில் கோபிசந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் ஸ்ரீநிவாஸ் இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. ஏற்கனவே லக்ஷ்யம் மற்றும் லோக்யம் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர். இதன்மூலம் ஹாட்ரிக் வெற்றியை கைப்பற்ற தயாராகிவிட்டனர். அதேசமயம் இயக்குனர் ஸ்ரீநிவாஸ் இந்தப்படத்தின் கதையை முதலில் கூறியது நடிகர் பாலகிருஷ்ணாவிடம் தானாம்..
ஆம். டிக்டேட்டர் மற்றும் சாக்ஷ்யம் என கடைசியாக அவர் இயக்கிய இரண்டு படங்களையும் பாலகிருஷ்ணாவை வைத்து தான் இயக்கியிருந்தார். அதனால் மூன்றாவதாக அவரையே வைத்து இயக்கும் முடிவில் இந்த கதையை அவரிடம் கூறினாராம். ஆனால் பாலகிருஷ்ணாவுக்கு இந்த கதை ரொம்பவே பிடித்திருந்தாலும் ஏற்கனவே கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு இந்தப்படத்தை ஆரம்பிக்கலாம் என கூறினாராம்.
அந்தசமயத்தில் ஏதேச்சையாக இந்த கதையை கோபிசந்த்திடம் இயக்குனர் ஸ்ரீநிவாஸ் சொல்ல, அவருக்கு பிடித்துப்போய் உடனே சம்மதம் சொல்லிவிட்டாராம்.