துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தமிழ்நாட்டில் விஜய் சேதுபதி போன்று மலையாளத்தில் பிருத்விராஜ் கையில் நிறைய படங்கள் இருக்கிறது. அவற்றில் பல முழுவதுமாக பணிகள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருப்பவை. தியேட்டர் திறப்புக்காக அவரது படங்கள் காத்திருந்தாலும் அவர் நடித்து முடித்த கோல்ட் கேஸ் படத்தை ஒடிடி தளத்தில் வெளியிடுகிறார் தயாரிப்பாளர்.
இந்த படத்தில் சத்யாஜித் எனும் போலீஸ் அதிகாரியாக பிருத்விராஜ் நடித்திருக்கிறார். அருவி படத்தின் மூலம் புகழ்பெற்ற அதிதி பாலன் இதில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். கர்ணன் படத்தில் தனுஷுக்கு அக்காவாக நடித்த லக்ஷ்மிபிரியா சந்திரமெளலி, சுசித்ரா பிள்ளை, ஆத்மியா ராஜன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
திருவனந்தபுரத்தில் நடக்கும் கொலையை பிருத்விராஜ் துப்பறிந்து கண்டுபிடிப்பதே படத்தின் கதை. த்ரிஷ்யம் படத்தின் பாணியிலான படம். படத்தை அமேசான் பிரைம் வாங்கி உள்ளது. வருகிற 30ம் தேதி வெளியாகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் வெளியாகும் முதல் பிருத்விராஜ் படம் இது. இதற்கு முன்பு மம்முட்டி, மோகன்லால், பகத் பாசில், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் படங்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.