100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
மலையாளத்தில் சில ஆண்டுகளுக்கு முன் பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற மகேஷிண்டே பிரதிகாரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அபர்ணா பாலமுரளி. இதை தொடர்ந்து தமிழில் 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம் ஆகிய படங்களில் நடித்தாலும் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த சூரரைப்போற்று படம் ரசிகர்களிடம் இவரை எளிதாக கொண்டு சேர்த்தது.
இந்தநிலையில் மலையாளத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் 'உல' (உலை) என்கிற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார் அபர்ணா பாலமுரளி. .டொவினோ தாமஸ் முதன்முறையாக போலீசாக நடித்த கல்கி என்கிற படத்தை இயக்கிய பிரவீன் பிரபாராம் என்பவர்தான் இந்தப்படத்தை இயக்குகிறார். சந்தோஷமாக செல்லும் குடும்பத்தில் திடீரென புயலடிக்க, அதை நாயகி எப்படி எதிர்கொள்கிறாள் என்பதுதான் படத்தின் கதையாம்.