பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா | சென்னை குற்ற சம்பவ பின்னணியில் உருவான 'சென்னை பைல்ஸ்' | 'டூரிஸ்ட் பேமிலி' இடத்தை பிடிக்குமா 'ஹவுஸ் மேட்ஸ்' | பாடல் இல்லாத படம் 'சரண்டர்' | பிளாஷ்பேக்: மாதவி இரு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: 3 சகோதரிகள் இணைந்து நடித்த படம் | மோகன்லாலின் நவரச வீடியோவை வெளியிட்ட ‛மலைக்கோட்டை வாலிபன்' பட இயக்குனர் | படத்தை விமர்சிக்கும் முன் தங்கள் வீட்டு பெண்களிடம் ஒரு கேள்வியை கேளுங்கள் : ஜேஎஸ்கே இயக்குனர் ஆதங்கம் | மோகன்லாலின் நகை விளம்பரத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய கேரள போலீஸ் |
மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் கடந்த வருடமே ஒப்புக்கொண்ட படங்கள் கைவசம் இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் கதைகேட்டு உடனே ஒப்புக்கொண்ட படம் 'ஜனகனமன'. அதுமட்டுமல்ல, அந்தப்படத்தின் படப்பிடிப்பும் கடந்த நவம்பரிலேயே ஆரம்பிக்கப்பட்டு அதில் நடித்தும் முடித்து விட்டார் பிரித்விராஜ். தேசிய விருது பெற்ற காமெடி நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, ட்ரைவிங் லைசென்ஸ் படத்தை தொடர்ந்து பிரித்விராஜூடன் இணைந்து இந்த படத்தில் இன்னொரு கதாநாயகனாக நடித்துள்ளார். டிஜோ ஜோஸ் ஆண்டனி என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தப்படத்தின் இரண்டரை நிமிட புரோமோவை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். இதில் குற்றம் சாட்டப்பட்டு சஸ்பென்ட் செய்யப்பட்ட போலீஸ்காரரான பிரித்விராஜை உயர் போலீஸ் அதிகாரியான சுராஜ் வெஞ்சாரமூடு விசாரணை செய்யும் இரண்டரை நிமிட காட்சியையும் புரோமோவாக வெளியிட்டுள்ளனர். பிரித்விராஜின் சமீபத்திய படங்களான ட்ரைவிங் லைசென்ஸ், அய்யப்பனும் கோஷியும் படங்களை போல இந்தப்படமும் இருவருக்கான ஈகோ யுத்தத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது போன்றே தெரிகிறது.