புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
1980களில் மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்தவர் பாலச்சந்திர மேனன். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், நடிப்பு என சினிமாவில் அனைத்து துறைகளிலும் இவர் முத்திரை பதித்துள்ளார். 'மலையாளத்தின் பாக்யராஜ்' என்று போற்றப்பட்டார். தற்போது அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் மீனு முனீர் என்ற நடிகை இவர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன் பலாத்கார புகார் கொடுத்தார். பாலச்சந்திரமேனன் இயக்கி நடித்த, 'தே இங்கோட்டு நோக்கியே' என்ற படத்தில் தன்னை நடிக்க அழைத்ததாகவும், படப்பிடிப்பு நாட்களில் ஓட்டலுக்கு வரவழைத்து தன்னை பலாத்காரம் செய்ததாகவும் அவர் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து நடிகை மீனு முனீரும், அவரது வக்கீலும் சேர்ந்து தன்னை மிரட்டி பணம் பறிக்க முயற்சிப்பதாக கூறி பாலச்சந்திர மேனன் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து நடிகை மீனு முனீர் முன்ஜாமின் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நடிகை மீனு முனீரை கொச்சி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஜாமினில் விடுவித்தனர்.