‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? |
திருவனந்தபுரம் : மலையாள நடிகர் திலீப் சங்கர் 54, திருவனந்தபுரத்தில் உள்ள ஓட்டல் அறையில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த பிரபல மலையாள நடிகர் திலீப் சங்கர். இவர் ஏராளமான மலையாள படங்களிலும், 'டிவி' தொடர்களிலும் நடித்துள்ளார். டிச.19ம் தேதி முதல், பஞ்சாக்னி தொடர் படப்பிடிப்புக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தார்.
நேற்று சக நடிகர்கள் அவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் போனை அவர் எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள், நடிகர் தங்கியிருந்த அறைக்கு வந்து பார்த்தபோது உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.
இதையடுத்து ஊழியர்கள் உதவியுடன் அறையை திறந்து பார்த்தபோது, நடிகர் திலீப் சங்கர் சடலமாக கிடந்தார். இது பற்றி அறிந்து விரைந்து வந்த போலீசார் திலீப் சங்கர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் இறப்புக்கு என்ன காரணம் என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.