ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் அதிகாலையில் திரையிடப்பட்ட போது, அங்கே பாஸ்கர் என்பவரும் அவரது மனைவி ரேவதி மற்றும் மகன் ஸ்ரீதேஜ், மகள் என நால்வரும் படம் பார்க்க வந்திருந்தனர். அந்த கூட்ட நெரிசலில் தியேட்டருக்குள் செல்வதற்காக அவர்கள் காத்திருந்த வேளையில் அப்போது அந்த திரையரங்கிற்கு நடிகர் அல்லு அர்ஜுன் தனது படக்குழுவினருடன் படம் பார்க்க வந்துள்ளார். அவரைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்த நிலையில் அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி நெரிசலில் பலியானார் ரேவதி. மகன் ஸ்ரீதேஜ் மிகுந்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். என்றாலும் நிலைமை கவலைக்கிடமாகவே இருக்கிறது.
இறந்துபோன பெண்ணின் கணவர் பாஸ்கரிடமிருந்து புகார் பெற்று தான் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அல்லு அர்ஜுன் இது தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளார். அதே சமயம் அல்லு அர்ஜுன் தரப்பில் இருந்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இரண்டு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேவையான உதவிகளை செய்வதாகவும் வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இறந்து போன பெண்ணின் கணவரான பாஸ்கர், அல்லு அர்ஜுன் மீதான தனது புகாரை வாபஸ் பெறுவதற்கு முயற்சி செய்து வருகிறார்.
ஆனால் காவல்துறை அதற்கு தீர்க்கமாக மறுத்துவிட்டது. காரணம், நடந்துள்ள சம்பவத்தின் தன்மை அப்படி என்றும், புகாரை வாபஸ் பெற செய்ய முடியாது இருக்கிறது என்றும், சிறு காயங்கள் உள்ளிட்ட சம்பவம் என்றால் மட்டுமே புகாரை வாபஸ் பெற முடியும் இதில் ஒரு உயிர் பலி மற்றும் ஒரு சிறுவனின் உயிர் போகும் அளவிற்கான காயம் ஆகியவை இடம் பெற்று இருப்பதால் புகாரை வாபஸ் பெற இயலாது என மறுத்து விட்டனர். மேலும் அல்லு அர்ஜுன் மீது சார்ஜ் ஷீட் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சட்ட அமலாக்கம் தனது வேலையை செய்யும் என்றும் கூறியுள்ளனர்.