மோகன்லால், பகத் பாசிலை பின்னுக்குத் தள்ளி கல்யாணி பிரியதர்ஷன் | 2025 : 8 மாதங்களில் 175 படங்கள் ரிலீஸ்... அதிர்ச்சி தரும் ரிசல்ட் | அனுஷ்கா வராதது அவர் விருப்பம் : இயக்குனர் கிரிஷ் பதில் | தெலுங்கு சினிமாவில் 1000 கோடி வசூல் : காரணம் சொல்லும் சிவகார்த்திகேயன் | அஜித், ஆதிக் இணையும் படம் : இந்த மாதம் அறிவிப்பு? | மீண்டும் இணைந்த எஸ்.எம்.எஸ் கூட்டணி : சரி, படத்துல சந்தானம் இருக்கிறாரா? | மலையாளத்தில் கல்யாணிக்கு நடந்தது : திரிஷா, நயன்தாராவுக்கு நடக்கலை | பார்த்திபன் இயக்கும் படத்தில் ‛லப்பர் பந்து' ஹீரோயின் | காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் |
மலையாள சினிமாவின் முன்னணி குணசித்ர நடிகர் பைஜு சந்தோஷ். நேற்று முன்தினம் நள்ளிரவு இவர் திருவனந்தபுரம் வெள்ளயம்பலம் பகுதியில் மதுபோதையில் காரை ஓட்டிச் சென்றார். இதனால் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதோடு சிக்னலில் இடித்தபடி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் சேதமடைந்தது. மேலும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் திருவனந்தபுரம் மியூசியம் போலீசார் விரைந்து வந்து காயமடைந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மதுபோதையில் இருந்த நடிகர் பைஜூ சந்தோஷை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அப்போது மதுபோதையில் இருந்ததால் அவரை பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ரத்த பரிசோதனைக்கு மறுத்து விட்டார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து பைஜூ சந்தோஷை கைது செய்தனர். அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் சொந்த ஜாமீனில் அவரை போலீசார் விடுவித்தனர்.