ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
தெலுங்கு திரையுலகில் சீனியர் நடிகரான பாலகிருஷ்ணா தென்னிந்திய அளவில் தனது அதிரடி ஆக்ஷ்ன் காட்சிகளாலும் வித்தியாசமான வசன உச்சரிப்புகளும் மற்றும் புது பாணியிலான மேனரிசங்களாலும் ரசிகர்களை கவர்ந்தவர். இப்போதும் அவரது படங்கள் தொடர்ந்து வெற்றி படங்களாக மிகப்பெரிய அளவில் வசூலை ஈட்டி வருகின்றன. அந்த வகையில் தற்போது தனது திரையுலக பயணத்தில் ஐம்பதாவது வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார் பாலகிருஷ்ணா.
64 வயதாகும் பாலகிருஷ்ணா கடந்த 1974ல் வெளியான தடம்மா காலா என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இவரது தந்தை என்டி ராமராவ் தான் இந்த படத்தின் கதாநாயகனாக நடித்ததுடன் இந்த படத்தை இயக்கியும் இருந்தார். அதனைத் தொடர்ந்து 1983ல் சாகசமே ஜீவிதம் என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான பாலகிருஷ்ணா நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளதுடன் இப்போது வரை தொடர்ந்து கதாநாயகனாகவே நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.