'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது |

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 12வது படத்தை ஜெர்ஸி பட இயக்குனர் கவுதம் தின்னூரி இயக்குகிறார் . சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்கிறார் . கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ஸ்ரீலீலா நடிப்பதாக அறிவித்தனர். சமீபத்தில் இப்படத்திலிருந்து ஒரு சில காரணங்களால் ஸ்ரீலீலா வெளியேறியதாக தகவல்கள் வெளியானது. தொடர்ந்து தற்போது இதில் கதாநாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸே ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தற்போது ரவி தேஜா உடன் இணைந்து 'மிஸ்டர் பச்சான்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




