குட் பேட் அக்லி டிரைலர் இன்று வெளியாகிறது | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக மிகப்பெரிய உயரத்தை தொட்டு விட்டவர் நடிகர் ராம்சரண். குறிப்பாக ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் படங்கள் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் திருமணம் ஆகி கிட்டத்தட்ட 10 வருடம் கழிந்த நிலையில் கடந்த வருடம் ராம்சரண் உபாசனா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதற்கு ‛கிளின் காரா' என பெயர் சூட்டியுள்ளனர்.
இந்த நிலையில் தான் நடித்து வரும் ‛கேம் சேஞ்சர்' படத்தின் போது கிடைத்த இடைவெளியில் சமீபத்தில் தாய்லாந்துக்கு சுற்றுலா கிளம்பி சென்றனர் ராம்சரண் தம்பதியினர். அங்கே யானை குட்டி ஒன்றை ராம்சரண் குளிப்பாட்டி விடுவதும் குழந்தையுடன் உபாசனா அதை பார்த்து ரசிப்பதுமான புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதை தொடர்ந்து சமீபத்தில் தாய்லாந்து சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு ஹைதராபாத் திரும்பி உள்ளார் ராம்சரண்.