ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' | பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் |

ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் தற்போது தேவரா என்கிற படத்தில் நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் சிவா கொரட்டாலா என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் பாலிவுட் நடிகையும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூர் முதன்முறையாக தெலுங்கு திரையுலகில் அடி எடுத்து வைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது இன்னொரு கதாநாயகியாக மராத்திய திரை உலகில் இருந்து ஸ்ருதி மராத்தே என்கிற நடிகை இந்த படத்தில் இணைகிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்றும் அதில் ஒருவருக்கு ஜோடியாக இவர் நடிக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.




