என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

மலையாளத்தில் இந்த வருடத்தின் முதல் பிரமாண்ட படமாக வெளியாக இருக்கிறது மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம். வித்தியாசமான கதைக்களங்களில் படங்களை இயக்குவதற்கு பெயர் பெற்ற இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி இந்த படத்தை இயக்கியுள்ளார். ராஜஸ்தானை கதைக்களமாக கொண்டு, மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி உள்ளது. இதில் மோகன்லால் மிகப்பெரிய மல்யுத்த வீரராக நடித்துள்ளார்.
இதுவரை மோகன்லால் நடித்திராத கதாபாத்திரம் என்பதுடன் ரசிகர்கள் இதுவரை அவரை பார்த்திராத ஒரு தோற்றத்திலும் அவர் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜனவரி 25ம் தேதி மலையாளம், தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் இந்த படத்தின் ஹிந்தி பதிப்பில் மோகன்லாலுக்காக டப்பிங் பேசியுள்ளார் பிரபல பாலிவுட் இயக்குனர் நடிகருமான அனுராக் காஷ்யப்.
எப்போதுமே தென்னிந்திய மொழி படங்களின் மீது மிகுந்த ஆர்வம் காட்டி வரும் அனுராக் காஷ்யப், மலைக்கோட்டை வாலிபன் படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு மிக நேர்த்தியாக அர்ப்பணிப்பு உணர்வுடன் டப்பிங் பேசி இருப்பதாக சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் மோகன்லால் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.