பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
திரிஷ்யம் படத்தின் மூலம் மலையாள திரைலகில் ஒரு புதிய வெற்றி கூட்டணியை மோகன்லாலும், இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து இந்த கூட்டணி வெற்றி படங்களை கொடுத்து வருகிறது. கொரோனா தாக்கத்திற்கு முன்பாக மோகன்லால், திரிஷா நடிப்பில் ராம் என்கிற படத்தை ஜீத்து ஜோசப் துவங்கினார். அதன்பின் அந்தபடம் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் மோகன்லாலை வைத்து நேரு என்கிற படத்தை இயக்கியுள்ளார் ஜீத்து ஜோசப். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை பிரியாமணி மோகன்லாலுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க நீதிமன்றத்தை மையப்படுத்தி, ஒரு பிரபல வழக்கை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ளது.
இதில் மோகன்லால் பிரியாமணி இருவருமே வழக்கறிஞர்களாக நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படம் வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பே உருவான மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் 2024 ஜனவரி 25ல் ரிலீஸ் ஆகும் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.