இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
அஞ்சம் பாதிரா, கும்பளங்கி நைட்ஸ், மற்றும் மஹேஷின்டே பிரதிகாரம் போன்ற படங்களின் எடிட்டிங் மூலம் கவனம் ஈர்த்தவர் சைஜு ஸ்ரீதரன். தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார். மஞ்சு வாரியர் சோலோ ஹீரோயினாக நடிக்கும் புட்டேஜ் என்ற படத்தை இயக்குகிறார். விசாக் நாயர் மற்றும் காயத்ரி அசோக் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடிக்கின்றனர். மூவி பக்கெட், காஸ்ட் அண்ட் கோ மற்றும் பேல் ப்ளூ டாட் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில், பினீஷ் சந்திரன் மற்றும் சைஜு ஸ்ரீதரன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். ஷினோஸ் ஒளிப்பதிவு செய்கிறார், சுஷின் ஷியாம் இசை அமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு திருச்சூர் நகரின் மையப்பகுதியான சிம்னி அணையில் நடந்தது. மஞ்சு வாரியார் கிளாப் அடித்து படத்தை துவக்கி வைத்தார். ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்து இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக் கு கொண்டு வர திட்டமிட்டிருக் கிறார்கள். இந்த படத்தை 'பவுண்டட் புட்டேஜ்' முறையில் தயாரிக்கிறார்கள். அதாவது வழக்கமான கேமரா கோணங்கள் இல்லாமல் கதையில் முக்கிய கேரக் டரை பின் தொடர்ந்து சென்று அவர் செய்வதை கேமரா அப்படியே பதிவு செய்யும் முறை.