'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' |
கடந்த ஆண்டு வெளியான 'ஒருத்தி' படத்திற்கு பிறகு நவ்யா நாயர் நடித்துள்ள மலையாளப் படம் 'ஜானகி ஜானே'. இதில் அவர் ஜானகி என்ற டைட்டில் ரோலில் நடித்துள்ளார். அவருடன் சைஜு குரூப், பிரமோத் வெள்ளியநாடு, ஜானி ஆண்டனி, ஸ்மினு சிஜோ, ஷரபுதீன் மற்றும் அனார்கலி மரிக்கார் ஆகியோர் நடித்துள்ளனர். அனீஷ் உபாசனா இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு சிபி மேத்யூ அலெக்ஸ் மற்றும் கைலாஸ் மேனன் இசையமைத்துள்ளனர். சியாம பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் நவ்யா நாயர் கிராமத்தில் நடத்தப்படும் அச்சகம் ஒன்றில் பணியாற்றும் தொழிலாளியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் இரிஞ்சால்குடா அருகே உள்ள கரளம் என்ற கிராமத்தில் ஒரே ஷெட்யூலில் படமாகி உள்ளது. கிராமத்து மண்ணின் மைந்தர்களும் நடித்துள்ளனர். காமெடி கலந்த சீரியசான படமாக உருவாகி உள்ளது. வருகிற மே 12ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.