ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
சமீபத்தில் மலையாளத்தில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தில் எளிய கிராமத்து மனிதராக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் நடிகர் மம்முட்டி. இதைத்தொடர்ந்து அடுத்ததாக ஜோதிகாவுடன் அவர் இணைந்து நடித்துள்ள ‛காதல் தி கோர்' என்கிற படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மம்முட்டி. இதைத்தொடர்ந்து உருவாகிவரும் ‛கண்ணூர் ஸ்குவாட்' என்கிற படத்தில் துப்பறியும் போலீசு அதிகாரியாக தற்போது நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக புனே நகரத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் தொடர்ந்து படமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒவ்வொரு லொக்கேஷனை மாற்றி மாற்றி படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர் படக்குழுவினர். போலீஸ் அதிகாரியான மம்முட்டி ஒரு வழக்கு தொடர்பாக தனது விசாரணையை இந்த பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் மேற்கொள்கிறார் என்பது போன்று கதை நகர்வதால் இப்படி அடிக்கடி வெவ்வேறு லொகேஷனை மாற்றி காட்சிகளை படமாக்கி வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.