ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பிரபல மலையாள இயக்குனர் ராமன் அசோக்குமார். 60 வயதான அவர் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மரணம் அடைந்தார்.
1989ம் ஆண்டில், சுரேஷ் கோபி, ஜெயராம் மற்றும் ரஞ்சினி ஆகியோர் நடித்த வர்ணம் படத்தின் மூலம் அசோகன் அறிமுகமானார். அவரது இரண்டாவது படம் ஆச்சார்யன். இதை தொடர்ந்து சாண்ட்ராம் மற்றும் மூக்கில்லா ராஜ்யம் ஆகிய இரண்டு படங்களைத் தயாரித்தார். 2003ம் ஆண்டு மெலடி ஆப் லோன்லினஸ் என்ற டெலிபிலிம் இயக்கினார். இந்தப் படம் கேரள மாநில விருதைப் பெற்றது. கதாசிரியர், வசனகர்த்தா, இயக்குனர் என அவர் 100 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார். அவர் இயக்கிய படங்கள் பெரும்பாலும் நகைச்சுவை படங்களாகவே இருந்தது.