பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார் | மொழி சர்ச்சை... கர்நாடகாவில் வலுக்கும் எதிர்ப்பு : மன்னிப்பு கேட்க முடியாது என கமல் திட்டவட்டம் | 7 ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ரிலீஸ் | விஜய் தேவரகொண்டா படத்தால் சூர்யா படத்தை கைவிட்ட கீர்த்தி சுரேஷ் | கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2விலும் நாகார்ஜூனா? | ''நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்'': எதை சொல்கிறார் மணிரத்னம்? | இட்லி கடை ரிலீஸ் தேதியில் சூர்யா 45 | தியேட்டரில் வெளியாகும் 'பறந்து போ' | என்னை பற்றிய பதிவுகளை நீக்க வேண்டும்: ஆர்த்திக்கு, ரவி மோகன் நோட்டீஸ் | மீண்டும் இணையும் வடிவேலு - பார்த்திபன் |
பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மகாபாரதத்தை தழுவி எழுதிய ரண்டமூழம் நாவல், ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிக பிரமாண்டமான படமாக உருவாக இருப்பதாக பல வருடங்களாக சொல்லப்பட்டு வந்த நிலையில் கடந்த 2016ல் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.. மோகன்லால் பீமனாக நடிக்க, துபாயை சேர்ந்த தொழிலதிபர் பி.ஆர்.ஷெட்டி என்பவர் தயாரிப்பில் உருவாக இருந்த இந்தப்படத்தை பிரபல விளம்பரப்பட இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் இயக்குவதாக இருந்தது.
ஆனால் இந்த படத்திற்காக தனது 'ரெண்டமூழம்' நாவலை கொடுத்த பிரபல எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர், ஒரு கட்டத்தில் இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் தன்னிடம் செய்த ஒப்பந்தப்படி, இந்தக்கதையை மூன்று வருடங்களில் படமாக்கவில்லை என்றும், அதனால் இந்த படத்திற்கு தன்னுடைய கதையை கொடுப்பதில்லை என முடிவெடுத்துவிட்டதாகவும் கதையை தன்னிடம் திருப்பிக் கொடுக்குமாறும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த பிரச்சனை காரணமாக இந்தப்படத்தை தயாரிக்கும் எண்ணத்தையே கைவிட்டுவிட்டார் படத்தின் தயாரிப்பாளர்.
ஆனால் கமலுக்கு ஒரு மருதநாயகம் படம் போல மோகன்லாலுக்கு இந்த ரெண்டமூழம் படம் ஒரு கனவுப்படமாகவே இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படம் குறித்து மோகன்லாலிடம் கேட்கப்பட்டபோது, ' இனி ரெண்டமூழம் படம் உருவாவதற்கு வாய்ப்புகளே இல்லை.. அது அப்போதே நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா தாக்கம் காரணமாக சூழ்நிலையும் அப்படியே மாறிவிட்டது. அதேசமயம் தற்போது எம்டி வாசுதேவர் எழுதிய சிறுகதையான ஒலவும் தீரவும் என்கிற குறும்படத்தில் பிரியதர்ஷன் டைரக்ஷனில் நடித்து ஆறுதலை தேடிக்கொண்டேன்” என்று கூறியுள்ளார் மோகன்லால்.