குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் |
மலையாள சினிமாவின் குணசித்ர நடிகை லீனா ஆண்டனி. நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த இவர், மகேஷிண்ட பிரதிகாரம், மகள், ஜோ அண்ட் ஜோ உள்பட ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார். 73 வயதான லீனா தற்போது 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: 10ம் வகுப்பு பொதுதேர்வில் தோல்வி அடைந்ததால் எனது தந்தை என்னை நாடக கம்பெனியில் சேர்த்து விட்டார். 100க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்து விட்டு பின்னர் சினிமாவுக்கு வந்தேன். எனது கணவர் ஆண்டனியும் நாடகத்திலும், சினிமாவிலும் நடித்து வந்தார். சில நேரங்களில் போதிய வருமானம் இல்லாமல் தவிக்கும்போது ஒரு வேளை அன்று 10ம் வகுப்பு பாசாகியிருந்தால் நம் வாழ்க்கை வேறு திசையில் சென்று இருக்குமோ என்று நினைப்பேன். அதனால் 10ம் வகுப்பு தேர்வு எழுதி பாசாகிவிடுவது என்று தீர்மானித்தேன்.
இதற்கு எனது கணவர் ஆண்டனி பெரிதும் உதவினார். நாடகம், சினிமாவில் வசனங்களை எளிதில் மனப்படாம் செய்து பேசிய அனுபவமும், பயிற்சியும் இருப்பதால் பாடங்களையும் மனப்பாடம் செய்ய உதவியது. இப்போது என் கணவர் இல்லை, இறந்து விட்டார். அவர் ஆசையையும் நிறைவேற்ற இந்த தேர்வை எழுதி இருக்கிறேன். என்கிறார் லீனா.