ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தெலுங்கில் மகாநடி படத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் மீண்டும் இணைந்து நடிக்கும் படம் குஷி. இயக்குனர் சிவா நிர்வாண இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு, தற்போது தான் வளர்ந்து வரும் ஹேசம் அப்துல் வகாப் என்கிற மலையாள இளம் இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் மோகன்லாலின் மகன் பிரணவ் மற்றும் கல்யாணி நடிப்பில், வினித் சீனிவாசன் இயக்கத்தில் உருவான ஹிருதயம் படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமானவர். இந்த படத்தில் சூப்பர் ஹிட்டான இரண்டு பாடல்களை கொடுத்ததால் இவருக்கு தெலுங்கில் குஷி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று சொல்லலாம்.
சமீபத்தில் குஷி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வகாப் படத்தின் கதாநாயகியான சமந்தாவை தனது மனைவியுடன் நேரில் சென்று சந்தித்து உள்ளார். இதுகுறித்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ள அவர், சமந்தாவுடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், இந்த படத்தில் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றும் ஹேசம் அப்துல் வகாப் கூறியுள்ளார்.