ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கேரளாவை சேர்ந்த கர்நாடக இசை கலைஞர் சங்கீதா சஜித். திரைப்பட பின்னணி பாடகியாக மாறிய சங்கீதா, தமிழ், மலையாள மொழி படங்களில் 200க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். தமிழில் மிஸ்டர் ரோமியா படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இடம் பெற்ற 'தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை' பாடல் மிகவும் புகழ்பெற்றது. கடைசியாக பிருத்விராஜ் நடித்த குருதி படத்தில் பாடி இருந்தார்.
46 வயதான சங்கீதா கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக, திருவனந்தபுரத்தில் உள்ள தன் சகோதரி வீட்டில் தங்கி இருந்து அதற்காக சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை காலமானார். சங்கீதாவின் மறைவிற்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.