பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
பஹத் பாசில் நடித்த அன்னயும் ரசூலும், துல்கர் சல்மான் நடித்த கம்மட்டிப்பாடம் ஆகிய படங்களை இயக்கியவர் ராஜீவ் ரவி. அடிப்படையில் ஒளிப்பதிவாளரான இவர் நளதமயந்தி படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த நடிகை கீது மோகன்தாசின் கணவர். கம்மட்டிப்பாடம் படத்தை முடித்ததும் மீண்டும் ஒளிப்பதிவாளராக மாறி தனது மனைவி இயக்கத்தில் நிவின்பாலி நடித்த மூத்தோன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார்.
அதை தொடர்ந்து நிவின்பாலி நடிக்கும் 'துறமுகம்' (துறைமுகம்) என்கிற படத்தை இயக்க ஆரம்பித்தார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு பாதி நடைபெற்ற நிலையில் கொரோனா காரணமாக தள்ளிப்போனதால், இளம் நடிகர் ஆசிப் அலியை வைத்து குட்டாவும் சிக்ஷையும் என்கிற போலீஸ் கதையை இயக்க ஆரம்பித்தார்.
இந்த நிலையில் இரண்டு படங்களின் படப்பிடிப்பும் மாறிமாறி நடைபெற்று முடிந்து, தற்போது இரண்டு படங்களுமே ஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்து வெளியாக இருப்பதுதான் ஆச்சர்யம். குட்டாவும் சிக்ஷையும் மே-27ஆம் தேதியும், துறமுகம் படம் ஜூன்-3ஆம் தேதியும் வெளியாக இருக்கின்றன,
துறமுகம் படம் 1940களில் நடைபெறும் கதையாக, துறைமுக தொழிலார்களின் வாழ்வாதார போராட்டங்களை மையப்படுத்தி உருவாகியுள்ளது. குட்டாவும் சிக்ஷையும் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லாராக உருவாகியுள்ளது.