கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
மலையாள திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர் இருமுகம் கொண்டவர் விஜய்பாபு. சமீபத்தில் இவரது மூன்றாம் முகம் வெளிப்படும் விதமாக நடிகை ஒருவர் இவர் மீது காவல்நிலையத்தில் பாலியல் பலாத்கார புகார் ஒன்றை அளித்தார். இதனடிப்படையில் போலீசார் விஜய்பாபு மீது வழக்கு பதிந்துள்ளனர். தன்மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தி புகார் கொடுத்துள்ளார் என சம்பந்தப்பட்ட பெண்ணின் அடையாளத்தை சோசியல் மீடியாவில் வெளிப்படுத்தியதாக இன்னொரு வழக்கும் அவர் மீது பதியப்பட்டது. இதனை தொடர்ந்து விஜய்பாபு, தான் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்பதற்காக துபாய்க்கு பறந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் போலீசார் விஜய்பாபுவுக்கு புளூ கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தங்களது அடையாளத்தையும் இருப்பிடத்தையும் வெளிப்படுத்த கோரி அனுப்பப்படுவது தான் இந்த புளூ கார்னர் நோட்டீஸ். இருந்தாலும் தற்போது கோடைக்காலம் என்பதால் நீதிமன்ற விடுமுறை காரணமாக விஜய்பாபுவுக்கு முன்ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அவர் முன்ஜாமீன் பெற்ற பிறகே கேரளாவுக்கு திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.