சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
கடந்த வாரம் தமிழில் துல்கர் சல்மான் நடித்த ஹே சினாமிகா என்கிற படம் வெளியானது. பிருந்தா மாஸ்டர் இயக்கியிருந்த இந்த படம் காதலை மையப்படுத்தி உருவாகியிருந்தது. தியேட்டரில் வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் சல்யூட் திரைப்படம் வரும் மார்ச் 18ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேசமயம் இந்த படம் தியேட்டர்களுக்கு வராமல் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படுகிறது.. இந்த அறிவிப்பு துல்கர் சல்மானின் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
காரணம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடித்த குரூப் திரைப்படம் தியேட்டரில் வெளியானது. அதேபோல ஹே சினாமிகா படமும் தியேட்டரில் தான் வெளியானது. குரூப் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதைவிட அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, துல்கர் சல்மான் முதன் முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சல்யூட் படத்தை தியேட்டரில் ஆரவாரத்துடன் பார்த்து ரசிக்க ரசிகர்கள் ரொம்பவே ஆவலாக இருந்தனர். ஆனால் தற்போது பொங்கிய பாலில் தண்ணீர் ஊற்றியது போல இந்த படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பு அவர்களை அப்செட் ஆகி உள்ளது உண்மைதான்.