100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
தெலுங்கில் சீனியர் நடிகர்களில், இன்றும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக அதிரடி ஹீரோவாகவே நடித்து வருபவர் நடிகர் பாலகிருஷ்ணா. சமீபத்தில் இவர் நடித்த அகண்டா திரைப்படம் வெளியாகி வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் தனியாக துவங்கியுள்ள ஆஹா என்கிற ஒடிடி தளத்தில் 'அன்ஸ்டாப்பபில் வித் என்பிகே' என்கிற ரியாலிட்டி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார் பாலகிருஷ்ணா.
சமீபத்தில் ஒளிபரப்பான எபிசோடுகளில் நடிகர்கள் நானி மற்றும் மோகன்பாபு ஆகியோர் கலந்து நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்தினார்கள். இந்தநிலையில் தற்போது நடிகர் மகேஷ்பாபு மற்றும் இயக்குனர் அனில் ரவிபுடி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் இந்த மாலை பொழுதை ரொம்பவே ரசித்து அனுபவித்தேன் என மகேஷ்பாபு கூறியுள்ளார். வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையின்பொது இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறதாம். இந்த நிகழ்ச்சி மூலம் மகேஷ்பாபு பற்றி இன்னும் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.