எம்ஜிஆர் - கருணாநிதி, நட்பு, மோதல் தழுவலில் 'காந்தா'? | கோவாவில் கூடிய 90 ஸ்டார்ஸ் : ஆட்டம், பாட்டம்,பார்ட்டி என கொண்டாட்டம் | 25 நாட்களைக் கடந்த '3 பிஹெச்கே, பறந்து போ' | 100 கோடி வசூலைக் கடந்த 'ஹரிஹர வீரமல்லு' | 'சாயரா' இந்தியாவில் நிகர வசூல் 250 கோடி | 'அவதார் - பயர் அண்ட் ஆஷ்' டிரைலர் ரிலீஸ் | ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் |
வளர்ந்து வரும் இளம் தெலுங்கு நடிகை ஷாலு சவுரசியா. ஓ பில்லா நீ வல்லா, பாக்ய நகர வீட்டுல் கம்மத்து போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் ஷாலு. மேலும் சில படங்களில் நடித்து வருகிறார். இவர் ஐதராபாத்தில் தனது வீட்டின் அருகில் உள்ள கேபிஆர் பூங்காவில் இரவு நேரத்தில் நடைபயிற்சி மற்றும் ஜாக்கிங் செல்வது வழக்கம். நேற்று முன்தினம் அவ்வாறு சென்றபோது அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத சிலர் அவரிடம் இருந்த செல்போன், நகை மற்றும் பணத்தை கேட்டு மிரட்டி உள்ளனர். அவரிடம் நகைகள் எதுவும் இல்லை. பணம் மற்றும் செல்போன் தர மறுத்துள்ளார். இதனால் அவரை சரமாரியாக தாக்கி விட்டு செல்போனையும், பணத்தையும் பறித்துச் சென்றனர். படுகாயம் அடைந்த ஷாலு தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக பஞ்சாரா ஹில்ஸ் பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி செய்த மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.