புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
படம் : பிதாமகன்
வெளியான ஆண்டு : 2003
நடிகர்கள் : விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா
இயக்கம் : பாலா
தயாரிப்பு : வி.ஏ.துரை
சேது, நந்தா என, வித்தியாசமான கதை களத்தில் முன்னோக்கி சென்ற இயக்குனர் பாலா, தன் மூன்றாவது படமான பிதாமகன் மூலம், அசுர பாய்ச்சல் நிகழ்த்தினார். இப்படத்தின் கதாநாயகன், சுடுகாட்டில் பிணம் எரிக்கும் வேலை செய்யும் வெட்டியான். கஞ்சா விற்கும் பெண், கதாநாயகி. சின்ன சின்ன பித்தலாட்டம் செய்யும் நண்பன். இப்படிப்பட்ட கதாபாத்திரங்களை பற்றி, தமிழ் சினிமா கதை சொன்னதில்லை. பாலா, எடுத்துக் காட்டினார்!
விக்ரம், சூர்யா இருவரையும் இணைத்து, மூன்றாவது படத்தை இயக்கியிருந்தார், பாலா. சுடுகாட்டு பாடலை தவிர வேறு ஏதும் தெரியாத, பேசாத, அழுக்கு உடையும், கரைபடிந்த பற்களும் உடைய சித்தனாக, விக்ரம் மிரட்டியிருந்தார். அவரின் உடல்மொழி, கோபம் அனைத்தும், தனிபெரும் நடிகனாக விக்ரமை காட்டியது. இப்படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகர் எனும் தேசிய விருது அவருக்கு கிடைத்தது.
விக்ரமிற்கு நேர் எதிர் கதாபாத்திரம், சூர்யாவிற்கு. அட அவருக்குள், இவ்வளவு அற்புதமான காமெடி நடிகர் இருக்கிறாரா என, அனைவரையும் வியக்க செய்தார். சீரியஸ் படத்திற்கு, சூர்யாவும், லைலாவும் தான் ரிலாக்ஸ் தந்தனர்.
படத்தின் மற்றொரு துாண், இளையராஜாவின் இசை. இளங்காத்து வீசுதே... என, தமிழகத்தை தாலாட்டியவர், பின்னணியில் இசையில் அசரடித்திருந்தார்.
தமிழில் அறிமுகமான மகாதேவன், இப்படத்தின் மூலம் தனிகவனம் பெற்றனர். இப்படத்தில் சில நாட்கள் நடித்த பின், சில பிரச்னையால், விக்ரம் விலகினார். அதன் பின் முரளி, சித்தன் கதாபாத்திரத்திற்காக அணுகப்பட்டார். பின் தயாரிப்பு தரப்பு மேற்கொண்ட முயற்சியால், விக்ரம் தொடர்ந்து நடித்தார். சங்கீதா கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தவர், சிம்ரன். திருமணம் காரணமாக, மூன்று நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுக்கப்பட்டு, பாடல் ஒன்றுக்கு மட்டும் சிம்ரன் பயன்படுத்திக்கொள்ளப்பட்டார்.
தமிழ் சினிமா இன்னும் நுழைய கதைகளங்கள் நிறைய உள்ளது என்றது, பிதாமகன்!