2025ல் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை யார் ? | மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை விற்பனை செய்த பிரியங்கா சோப்ரா! | ரெட்ரோ படம் சூர்யாவுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளது! - கார்த்திக் சுப்பராஜ் | 500 கோடி நிகர வசூலைக் கடந்த 'ச்சாவா' | சினிமா துறையில் பாலின பாகுபாடு: மாதுரி தீக்சித் கவலை | பிரபு, வெற்றி இணைந்து நடித்து ரிலீசுக்கு தயாரான 'ராஜபுத்திரன்' | 'ஹிட் 3' பார்க்காதீர்கள்: நானி சொன்ன காரணம் தெரியுமா? | ''ரசிகர்கள் மாறிவிட்டாங்க...'': ஷில்பா ஷெட்டி | 'அவள்' பட இயக்குனருடன் இணைகிறாரா ரவி மோகன்? | பராசக்தி இந்த காலகட்டத்திற்கு பொருந்தும்! - ஆகாஷ் பாஸ்கரன் |
படம் : வல்லரசு
வெளியான ஆண்டு : 2000
நடிகர்கள் : விஜயகாந்த், தேவயானி, கரண், ரகுவரன்
இயக்கம் : என்.மகாராஜன்
தயாரிப்பு : கேப்டன் சினி கிரியேஷன்ஸ்
சினிமாவில் போலீஸ் வேடம் என்றால், அது விஜயகாந்திற்கு தான் சாலப் பொருத்தம். வானத்தைப் போல எனும் சென்டிமென்ட் படத்திற்கு அடுத்து, வல்லரசு எனும் பரபரப்பான போலீஸ் கதையில் நடித்தார், விஜயகாந்த். படம், பட்டையை கிளப்பியது. இப்படத்தை, விஜயகாந்த் தயாரித்திருந்தார்.
கார்கில் யுத்தத்திற்கு பின், இந்தியாவில் ஊடுருவி நகரங்களில் வெடிகுண்டு வைத்து, நாட்டைச் சூறையாடத் திட்டமிடுகிறான், பயங்கரவாதியான வாசிம் கான். அவருக்கு, விஜயகாந்தின் மாமனாரும் துணை போகிறார். கடமை தவறாத போலீஸ் அதிகாரியான விஜயகாந்த், இருவரையும் சுட்டுக்கொல்கிறார் என்பது தான், படத்தின் கதை.
பிரபல இயக்குனரான பி.வாசு, இப்படத்தின் மூலம், நடிகராக அறிமுகம் ஆனார். அவரும், விஜயகாந்தும் மோதும் காட்சிகள் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன.
ஜாதி சங்க தலைவராக வரும் மன்சூர்அலிகானை, போலீஸ் அதிகாரியான விஜயகாந்த், டீல் செய்யும் காட்சியில், தியேட்டரில் கைத்தட்டல் பலமாக எழுந்தது. ஜாதி சங்க போராட்டம் நடக்கும்போது, இந்த காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார், என்.மகாராஜன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்தடுத்து படங்கள் இயக்கியவர், பின் காணாமல் போனார். அனல் தெறிக்கும் வசனங்களோடு, படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களிடையே மிகச் சிறந்த வரவேற்பை பெற்றன.
தேவாவின் இசையில், அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு, அடையாறு பீச்சோரம், செக்கச் செக்கச் செவந்த பொண்ணு... பாடல்கள், சூப்பர் ஹிட் ஆயின. தமிழில் மாஸ் ஹிட்டான இப்படத்தை, தெலுங்கில், நரசிம்மநாயுடு என்ற பெயரிலும்; ஹிந்தியில் இந்தியன் என்ற பெயரிலும் இயக்கியிருந்தார், என்.மகாராஜன்.
வென்றது, வல்லரசு!