'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
தமிழில் கடந்த நான்கு வருடங்களாகத்தான் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால், ஹிந்தியில் 14 சீசன்கள் முடிந்துவிட்டது. இந்த வருடத்திற்கான 15வது சீசன் அக்டோபர் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது.
கடந்த 11 சீசன்களாக சல்மான்கான் இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வருகிறது. கடைசியாக ஒளிபரப்பான 14வது சீசனில் சல்மான்கான் ஒரு வாரத்திற்கு 20 கோடி வரை சம்பளம் வாங்கினாராம். ஆனால், வர உள்ள 15வது சீசனில் ஒரு வாரத்திற்கு 25 கோடி வரை தனது சம்பளத்தை உயர்த்திவிட்டாராம்.
நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு இருப்பதால் சல்மான்கான் கேட்ட தொகையை தயாரிப்பு நிறுவனம் வழங்க சம்மதித்துவிட்டதாம். மொத்தம் 14 வாரங்கள் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியில் மட்டும் சல்மான் மொத்தமாக 350 கோடி வரை சம்பாதித்து விடுவார்.
ஒரு படத்தில் 100 நாட்கள் நடித்தால் கிடைக்கும் சம்பளத்தை விட 14 நாட்களில் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினால் மூன்று மடங்கு சம்பளம் அதிகம் வரும். இந்தியாவில் ஒரு வருடத்திற்கு அதிகமாக சம்பாதிக்கும் பிரபலங்களின் டாப் 5 பட்டியலில் சல்மான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.