இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

ஹிந்தித் திரையுலகின் சீனியர் ஹீரோ அனில் கபூர். அவருக்கு சோனம் கபூர், ரியா கபூர் என்ற இரு மகள்களும், ஹர்ஷவர்தன் கபூர் என்ற மகனும் இருக்கிறார்கள்.
சோனம் கபூர் பாலிவுட்டில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கிறார். அவருக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவரது தங்கையான ரியா கபூர் கடந்த 13 வருடங்களாக கரண் பூலானி என்பவரைக் காதலித்து வந்தார். ரியாவுக்கும், கரணுக்கும் இன்று இரவு திருமணம் நடைபெற உள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் திருமணம் பற்றி அனில் கபூர் குடும்பத்தினர் எதுவும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கான அனைத்து வேலைகளும் ரகசியமாக நடந்து வருவதாகச் சொல்கிறார்கள்.
கரண் பூலானி விளம்பரப் பட இயக்குனராகவும், உதவி இயக்குனராகவும் பணி புரிந்து வருபவர். ரியா கபூர் முதன் முதலில் தயாரித்த 'ஆயிஷா' படத்தில் கரண் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தார். அப்போதிலிருந்தே இருவரும் காதலித்து வருகிறார்களாம்.
லண்டனில் கடந்த ஒரு வருடமாக தனது கணவருடன் வசித்து வந்த சோனம் கபூர் இரு வாரங்களுக்கு மும்பை திரும்பினார். தனது தங்கை திருமணத்திற்காகத்தான் அவர் மும்பை திரும்பியதாக பாலிவுட்டினர் தெரிவிக்கிறார்கள். ரியா திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல்.
அனில் கபூர் அண்ணன் போனி கபூர் தான் அஜித் நடிக்கும் 'வலிமை' படத்தின் தயாரிப்பாளர் என்பது கூடுதல் தகவல்.