இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

ஹிந்தியில் ரஞ்சித் எம்.திவாரி இயக்கத்தில் அக்சய்குமார், ஹூமா குரோசி, வாணி கபூர், லாரா தத்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்பை திரில்லர் படம் பெல்பாட்டம். இந்த படத்தை கொரோனா தொற்று காரணமாக ஓடிடியில் வெளியிடப்போவதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் அதையடுத்து பெல்பாட்டம் கண்டிப்பாக தியேட்டரில் தான் வெளியாகும் என்று அறிவித்து அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அக்சய்குமார்.
இந்த நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது அலை குறைந்திருப்பதால் ஆகஸ்ட் 19-ந்தேதி பெல்பாட்டம் படத்தை தியேட்டரில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர். மேலும், கொரோனா லாக் டவுனுக்கு பிறகு ரசிகர்களுக்கு தியேட்டர்களுக்கு வரும் ஆர்வம் குறைந்து விட்டதால், அவர்களை தியேட்டருக்கு இழுக்கும் முயற்சியாக பெல்பாட் டம் படத்தை 3டியில் வெளியிடப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது.