ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

பிரபல பாலிவுட் நடிகர் ஜிம்மி ஷெர்கில் நடித்து வரும் வெப் சீரிஸ் சுனா. கொரோனாவால் தடைபட்டிருந்த இதன் படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு லக்னோவில் தொடங்கி, நடந்து வந்தது. படப்பிடிப்பில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி இருந்ததால் 90 பேர் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.
படக்குழுவினருக்கு கொரோன பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவ துறை அதிகாரிகள் வலியுறுத்தியதால் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. 30 பேரின் பரிசோதனை முடிவுகளில் 5 பேருக்கு உறுதியாகி உள்ளது. மீதமுள்ளவர்களின் முடிவுகள் இன்னும் வரவில்லை.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பில் பங்கேற்ற மற்றவர்களை 4 தனியார் ஓட்டலில் தனிமைப்படுத்தி உள்ளனர். படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளது. நாயகன் ஜிம்மி ஷெர்கிலுக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்தாலும், அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.