நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரும் புகழ்பெற்ற டி-சீரிஸ் ஆடியோ நிறுவனத்தின் உரிமையாளருமான பூஷண் குமார் மீது மும்பை டிஎன் நகர் காவல்நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுக்கப்பட்டு, எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. 30 வயதான பெண் ஒருவர் பூஷண்குமார் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதாக அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பூஷண்குமார் தரப்பினரோ இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். அவர்கள் தரப்பில் இருந்து வெளியிட்டுள்ள செய்தியின்படி, ‛‛சம்பந்தப்பட்ட பெண், தான் வெப்சீரிஸ் தயாரிக்கப்போவதாக பூஷண்குமாரை அணுகி அதற்காக பணம் கேட்டாராம். ஆனால் அதற்கு பூஷண்குமார் மறுத்துவிட்டதால், தன்னிடம் தவறாக நடந்ததாக வெளியில் கூறிவிடுவேன் என பணம் கேட்டு மிரட்டினாராம் அந்த பெண். அதற்கு பூஷண்குமார் மசியாததால், அவர்மீது பொய்யான குற்றச்சாட்டை கூறி புகார் அளித்துள்ளாராம். இதை சட்ட ரீதியாக சந்திப்போம்'' என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.