ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கிரிக்கெட் பற்றியோ, கிரிக்கெட் வீரர்கள் பற்றியோ படம் எடுத்தால் மினிமம் கியாரண்டி என்கிற நிலை ஹிந்தி படங்களுக்கு இப்போது இருக்கிறது. அதனால் கிரிக்கெட் வீரர்கள் பற்றி படம் எடுக்க தயாரிப்பாளர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி ஆகியோரது வாழ்க்கை வரலாறு ஏற்கனவே திரைப்படமாக வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பினை பெற்றது. கபில்தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்ற நிகழ்வை மையப்படுத்தி உருவாகி உள்ள 83 என்ற படம் வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைவருமான கங்குலியின் வாழ்க்கையும் சினிமாவாகிறது. பல ஆண்டுகளாக யூக செய்தியாக உலவிக் கொண்டிருந்த இதனை கங்குலி இப்போது உறுதி செய்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் "எனது வாழ்க்கையை சினிமாவாக எடுக்க தொடர்ந்து அனுமதி கேட்டு வந்தார்கள். இப்போது அதற்கு அனுமதி அளித்திருக்கிறேன். அது ஹிந்தியில் எடுக்கப்படுகிறது. இயக்குனர் யார், தயாரிப்பாளர் யார் என்பதை படம் எடுப்பவர்கள் அறிவிப்பது தான் முறையானது. அதற்கு சில நாட்கள் ஆகும்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கங்குலியாக நடிக்க ரன்பீர் கபூர் தயாராகி வருகிறார் என்றும், 250 கோடி பட்ஜெட்டில் இப்பட தயாரிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.