ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

கடந்த 2௦17-ல் விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் 'விக்ரம் வேதா' படம் ரிலீஸானது. புஷ்கர்-காயத்ரி என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கிய இந்தப்படம் கேங்ஸ்டர் பாணி கதைக்களத்தில் புதுமையாக சொல்லப்பட்டிருந்தது. இந்தப்படத்தின் கதை ஹிந்திக்கும் செட்டாகும் என்பதால், ஆமீர்கான் மற்றும் சைப் அலி கான் இருவரையும் இணைத்து இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக முதலில் அறிவிப்பு வெளியானது. ஆனால் திடீரென ஆமீர்கான் இந்தப்படத்தில் வெளியேற, அவருக்கு பதிலாக ஹிருத்திக் ரோஷன் நடிக்கிறார்.
தமிழில் படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்ரி இருவரும் இந்தப்படத்தை ரீமேக் செய்வதன் மூலம் இந்தியில் நுழைகிறார்கள். இந்தநிலையில் விக்ரம்-வேதா இருவர் தவிர முக்கிய கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக நடித்திருந்தார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இந்தியில் அந்த கதாபாத்திரத்தில் கபாலி பட நாயகி ராதிகா ஆப்தே நடிக்க இருக்கிறாராம். வரும் செப்-30ல் படத்தை ரிலீஸ் செய்யும் திட்டத்தில் விறுவிறுப்பாக படத்தை துவங்க இருக்கிறார்களாம்.