லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
ஒடிய மொழியில் வேகமாக வளர்ந்து வந்த இளம் பாடகி தபு மிஸ்ரா. ஒடிய மொழி படங்களில் 150க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். ஒடிய மொழி சினிமா சரித்திரத்தில் இவர் அளவிற்கு கொண்டாடப்பட்ட பாடகி இல்லை என்கிறார்கள். லட்சக் கணக்கான ரசிகர்களை கொண்டவர்.
36 வயதே ஆன தபு மிர்ஷா, கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் கொரோனா வைரசால் தாக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்கு பிறகு மீண்டு வந்தார். பின்னர் கடந்த மாதம் 19ம் தேதி அவருக்கு மீண்டும் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
அவரின் மருத்துவ செலவை ஏற்பதாக ஓடிசா மாநில அரசு அறிவித்தது. அவரது ரசிகர்களும் அவருக்காக நிதி திரட்டி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவர் மரணம் அடைந்தார்.
தபுவின் மரணத்திற்கு ஒடியா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட தலைவர்களும், திரையுலக பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நவீன் பட்நாயக் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் "தபு மிஷ்ரா ஒடியாவின் குரலாக என்றென்றும் நினைவு கூறப்படுவார்" என்று தெரிவித்துள்ளார்.