லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் ஜான்வி கபூர் அம்மா வழியில் நடிகையாகிவிட்டார். இரண்டாவது மகள் குஷி கபூர் விரைவில் நடிக்க வருவார் என்று பாலிவுட்டில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
அக்கா ஜான்விக்கு இருக்கும் பிரபலம் என்கிற அந்தஸ்து, இன்னும் நடிகை ஆகாத தங்கை குஷிக்கும் இருக்கிறது. அம்மா ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழிகளிலும் முன்னணியில் இருந்தாலும் அதிகமான கிளாமர் கதாபாத்திரங்களில் நடித்ததும் கிடையாது, கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டதும் கிடையாது.
ஆனால், மகள்கள் இருவருமே அதற்கு நேர் எதிர் போலிருக்கிறது. சமீபத்தில் பீச்சில் தனது ஆண் நண்பருடன் குளியல் போட்ட பிகினி புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார் அக்கா ஜான்வி கபூர். தற்போது தங்கை குஷி நீச்சல் குளத்தில் குளிக்கக் காத்திருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து, 'நீச்சல் குளம் நாள்” எனப் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படங்களைப் பார்க்கும் பாலிவுட் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் சீக்கிரமே குஷியைத் தங்கள் படங்களில் நடிக்க வைக்க முயற்சிப்பார்கள்.