காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா | ரசிகர்களை சந்தித்த ரஜினி, அட்வைஸ் செய்த கமல், புதுப்புது அறிவிப்புகள், போஸ்டர்கள் : களைகட்டிய 2026 துவக்கம் |

இந்தியாவின் செஸ் வீரர் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த். இந்தியாவின் முக்கிய விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை சினிமாவாகி வருவதை போன்று விரைவில் விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கையும் சினிமாவாக இருக்கிறது. இது தொடர்பான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்ட செக்மேட் கோவிட் என்கிற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பிரபலங்கள் சிலர் விஸ்வநாதன் ஆனந்துடன ஆன்லைன் மூலமாக செஸ் விளையாடினார்கள். அதன் ஒரு பகுதியாக பாலிவுட் நடிகர் ஆமீர்கானும் அவருடன் செஸ் விளையாடினார். அப்போது விஸ்வநாதன் ஆனந்தின் பயோபிக்கில் நடிப்பீர்களா? என்று கேட்கப்பட்டபோது ஆமீர்கான் கூறியதாவது:
விஸ்வநாதன் ஆனந்தன் கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு கவுரவம், மகிழ்ச்சி. அப்படி நான் நடித்தால் அவரது எண்ணங்களை என மனதில் ஏற்றிக் கொள்வேன். அது இன்னும் உற்சாகத்தை தரும். அவரோடு நிறைய நேரம் செலவிட்டு அவரது மன ஓட்டம் என்ன என்பதைத் தெரிந்துகொள்வேன். அவரது குடும்பத்தினரிடமும் பேசி அவரைப் பற்றித் தெரிந்துகொள்வேன். அதன் பிறகு திரையில் அவரைப் போல நடித்து ஆச்சரியப்படுத்துவேன் . எனவே அப்படி ஒரு விஷயம் நடந்தால் அதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கிறேன். என்று ஆமிர் கான் பதிலளித்தார்.