ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரபுவதற்கு முன்பாகவே மகாராஷ்டிரா மாநிலத்தில் பரவியது. அங்கு கடந்த மாதத்திலிருந்து தொற்று பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. கடந்த வாரத்திற்கான தளர்வுகளில் சினிமா படப்பிடிப்புகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. கடும் பாதுகாப்பு, கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடத்தலாம் என அனுமதிக்கப்பட்டது. வெளிப்புற படப்பிடிப்புகளை மாலை 5 மணிக்கு மேல் நடத்த அனுமதியில்லை.
அதன் காரணமாக தற்போது பாலிவுட்டில் மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பரபரப்பாக ஆரம்பமாகி நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். சில பெரிய படங்களின் படப்பிடிப்புகளுக்கு அதில் நடிக்கும் பெரிய நடிகர்களின் கால்ஷீட் காரணமாக இந்த வாரத்தில்தான் ஆரம்பமாகும் என்கிறார்கள். பல சினிமா பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் பயமில்லாமல் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முன் வருகிறார்களாம்.
தெலுங்கிலும் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில்தான் தெலுங்குப் படங்களின் படப்பிடிப்புகள் அதிகம் நடக்கும். தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பும் அங்கு அதிகம் நடைபெறும் என்பதால் இங்கிருந்தும் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தெலுங்கு, தமிழில் சினிமா படப்பிடிப்புகள் இன்னும் பரபரப்பாக ஆரம்பமாகாமல் இருக்கிறது. அடுத்த வாரத்தில் அவை தொடங்கப்படலாம் எனத் தெரிகிறது.