மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை | சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனம் ஏன் ? |
ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜய் தேவ்கன் ரூ.60 கோடிக்கு பங்களா வாங்கிய செய்தி தான் பாலிவுட்டில் கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
மும்பையின் காஸ்ட்லி பகுதியான ஜுஹு-வில் ஒரு பழைய பங்களாவை 60 கோடி ரூபாய் கொடுத்து அஜய் தேவ்கன் வாங்கியுள்ளார். கடந்த வருடக் கடைசியிலேயே அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாகத் தெரிகிறது.
மார்க்கெட் மதிப்பின்படி சுமார் 70 கோடி ரூபாய் வரை அந்த பங்களாவின் மதிப்பாம். ஆனால், கொரோனா காலமென்பதால் பத்து கோடி வரை குறைத்து அஜய் வாங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள். தற்போது அந்த பங்களாவில் சில மாற்றங்களைச் செய்யும் பணி நடந்து வருகிறதாம். அது முடிந்ததும் அங்கு அஜய் தேவ்கன் குடியேற உள்ளாராம்.
அந்தப் பகுதியி ல்தான் பாலிவுட் பிரபலங்களான அமிதாப்பச்சன், அக்ஷய்குமார், தர்மேந்திரா, ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் ஏற்கெனவே வசித்து வருகிறார்கள்.
2008ம் ஆண்டிலேயே தனது சொந்தத் தேவைகளுக்காக தனி விமானம் ஒன்றை வாங்கியவர் அஜய். விலை உயர்ந்த சில கார்கள், தனி கேரவன், லண்டனில் சொகுசு பங்களா என அஜய் வாங்கி வைத்திருப்பவற்றைப் பார்த்து பாலிவுட்டில் சிலருக்குப் பொறாமை உண்டு.
அஜய் தேவ்கன் மனைவி கஜோல், மகள் நிசா, மகன் யுக் ஆகியோருடன் வசித்து வருகிறார்.