சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கிய திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கை மீண்டும் அவரே கமலை வைத்து இயக்கினார். தெலுங்கில் ஸ்ரீபிரியாவும், கன்னடத்தில் பி.வாசுவும், ஹிந்தியில் நிஷிகாந்த் காமத் ஆகியோரும் ரீமேக் செய்தார்கள்.
இந்த நிலையில் திரிஷ்யம் -2 படத்தையும் மோகன்லாலை வைத்த மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப், தற்போது தெலுங்கில் வெங்கடேசை வைத்து இயக்கியுள்ளார். கன்னடத்தில் மீண்டும் பி.வாசுவே இயக்குகிறார். இந்த நிலையில், திரிஷ்யம்-2 படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்புகள் நிலவிக் கொண்டிருக்கிறது.
காரணம், திரிஷ்யம் படத்தின் முதல் பாகத்தை ஹிந்தியில் அஜய்தேவ்கன், ஸ்ரேயாவை வைத்து இயக்கிய நிஷிகாந்த் காமத் இறந்து விட்டார். ஹிந்தி, மராத்தி மொழிப்பட டைரக்டரான இவர் தமிழில் மாதவன் நடித்த எவனோ ஒருவன் என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.
இந்நிலையில், திரிஷ்யம்-2 படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்கியுள்ள பனோரமா ஸ்டுடியோ இன்டர்நேஷனல் நிறுவனம், அப்படத்தை ஜீத்து ஜோசப்பையே இயக்கித் தருமாறு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதனால் தற்போது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ராம் என்ற படத்தை இயக்கி வரும் ஜீத்து ஜோசப், அப்படத்தை இயக்கி முடித்ததும் ஹிந்தி திரிஷ்யம்-2 படத்தின் ரீமேக்கை தொடங்குவார் என்று கூறப்படுகிறது.