ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

உலக அழகியான பிரியங்கா சோப்ரா நடிகையாக அறிமுகமானது தமிழில் தான். விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்தார். அதன் பிறகு பாலிவுட்டில் முன்னணி நடிகையாக மாறியவர். இப்போது ஹாலிவுட் நடிகை. ஹாலிவுட் பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரியங்கா, கணவருடன் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலேயே செட்டிலாகிவிட்டார்.
தற்போது ஹாலிவுட் படங்கள், டி.வி.தொடர்களில் நடித்து வரும் பிரியங்கா, நியூயார்க் நகரில் சோனா என்ற பெயரில் இந்திய உணவகம் ஒன்றை தொடங்குகிறார். இதற்கான முதல் பூஜை இந்து முறைப்படி சமீபத்தில் நடந்தது. அதில் கணவர் நிக் ஜோன்சுடன் பிரியங்கா கலந்து கொண்டார். அடுத்த மாதம் இந்த உணவகம் திறக்கப்படுகிறது.
இதுகுறித்து பிரியாங்கா சோப்ரா கூறியிருப்பதாவது: நியூயார்க்கில் சோனா என்ற பெயரில் ரெஸ்டாரென்ட் துவங்க உள்ளேன். இந்திய உணவு பிரியர்களுக்காக இந்த மாத இறுதியில் சோனா திறக்கப்பட உள்ளது. இதில் இந்திய உணவோடு இந்தியர்களின் அன்பும் சேர்த்து பரிமாறப்படும். என குறிப்பிட்டுள்ளார்.