'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டு மரணத்தை தழுவினார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலி ரியா சக்கரபோர்த்தி மீது சுஷாந்த் குடும்பத்தினரால் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின் சுஷாந்துக்கு போதை மருந்து தந்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ரியா சில வார சிறைவாசத்துக்கு பின் ஜாமீனில் விடுதலை ஆனார்.
இந்தநிலையில் நாளை (ஜன-21) சுஷாந்த்தின் பிறந்தநாள் வருகிறது. தற்போதே டிவிட்டரில் சுஷாந்த் பற்றிய ஹேஷ்டேக்குள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன. இதையடுத்து சுஷாந்துக்கு நினைவஞ்சலி செலுத்துவதற்காக சாலையோர பூக்கடையில் பூங்கொத்து வாங்குவதற்காக காரில் வந்து இறங்கினார் ரியா. அவர் மாஸ்க் அணிந்திருந்தாலும் அவரை கண்டுகொண்ட சில ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து கேள்விகளை எழுப்பியபடியே வந்தனர். அவர்களிடம் தன்னை விட்டுவிடுங்கள் என கெஞ்சும் விதமாக கையெடுத்து கும்பிட்ட ரியா சக்கரபோர்த்தி, தான் வந்த காரில் ஏறி அங்கிருந்து சென்றார்.