'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
கேங்ஸ் ஆப் வசேபூர் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் ரிச்சா சட்டா. அதன் பிறகு மசான், சர்பிஜித், வோர்ட்ஸ் வித் காட், 3 ஸ்டோரிஸ், கப்ராட், பங்கா உள்பட பல படங்களில் நடித்தார். கடைசியாக கவர்ச்சி நடிகை ஷகிலாவின் பயோபிக் படத்தில் நடித்தார்.
இவர் நடித்து தற்போது வெளிவரவிருக்கும் படம் மேடம் சீப் மினிஸ்டர். சுபாஷ் கபூர் இயக்கி உள்ள இந்த படத்தில் ரிச்சா சட்டாவுடன் மனவ் கவ்ல், அக்ஷய் ஓபராய், நிகில் விஜய் உள்பட பலர் நடித்திருக்கிறர்கள். இது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
நாளை படம் வெளிவருகிறது. இந்த நிலையில் இந்த படம் தாழ்த்தப்பட்ட மக்களை அவதூறு செய்வதாகவும், இரு பிரிவினருக்கு இடையே வன்முறையை தூண்டும் விதமாக இருப்பதாவும் கூறி படத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அரியானா மாநில பீம் சேனா அமைப்பின் கைதல் மாவட்ட தலைவர் அசோக் தானியாக என்பவர் டிரம்ப் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது தொடர்பாக நடிகை ரிச்சா சட்டா, படத்தின் இயக்குனர், மற்றும் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.