சரவண விக்ரம் ஹீரோவாக நடிக்கும் ‛டியர் ரதி' | 75வது பிறந்தநாள்: எங்கு இருக்கிறார் ரஜினிகாந்த்? | பிளாஷ்பேக் : சம்பளம் வாங்காமல் நடித்த சிவாஜி, பத்மினி, சாவித்திரி | பிளாஷ்பேக் : நிஜ பாம்புடன் துணிச்சலாக நடித்த ஜெயசித்ரா | படையப்பாவின் படிக்கட்டுகள்... : ரஜினி 75, 50 ஸ்பெஷல் | 'திரிஷ்யம் 3' படத்தில் முக்கிய வேடத்தில் சுனில் | என்னை அழைத்தது வில்லனாக நடிக்க அல்ல; 'பென்ஸ்' பட ட்விஸ்ட் உடைத்த நிவின்பாலி | 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது: ரஜினிக்கு விருது | ஆரோக்கியமான வாழ்க்கை, வயதை வென்ற வசீகரம் : ரஜினிக்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து | பிரித்விராஜின் அண்ணன் படம் வளைகுடா நாடுகளில் வெளியாக தடை |

மலையாளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மோகன்லால் நடிப்பில் இயக்குனர் தருண் மூர்த்தி இயக்கத்தில் வெளியான தொடரும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. மோகன்லாலுக்கு இது மற்றும் ஒரு சாதனை படம் என்றாலும், அதற்கு முன்பு இரண்டு சிறிய படங்களை இயக்கியிருந்த தருண் மூர்த்திக்கு இது மிகப்பெரிய வெற்றி. இதைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தொடரும் படத்தை ரீமேக் செய்து இயக்கும்படி அவருக்கு தொடர் அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் ஏற்கனவே மலையாளத்தில் டார்ப்பிட்டோ, தற்போது பிரித்விராஜ் நடிப்பில் உருவாகி வரும் ஆபரேஷன் கம்போடியா ஆகிய படங்களில் கவனம் செலுத்தி இயக்கி வரும் தருண் மூர்த்தி அடுத்ததாக மோகன்லால் நடிக்க இருக்கும் புதிய படத்தை இயக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இது குறித்த அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியானது. அதேசமயம் ஹிந்தியிலும் இந்த படத்தை ரீமேக் செய்து இயக்கச் சொல்லி அழைப்பு வந்திருப்பதாக சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார் தருண் மூர்த்தி.
“ஹிந்தியில் அஜய் தேவகன் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் பொருத்தமாக இருப்பார். காரணம் உண்மைக்கு மிக பக்கத்தில் இயல்பான சண்டைக் காட்சிகளில் அசத்தக்கூடியவர் அவர். அது மட்டும் அல்ல அவரது தந்தையும் ஒரு ஆக்ஷன் கோரியாகிராபர் என்பதால் இந்த படத்துடன் அஜய் தேவ்கனை எளிதாக தொடர்புபடுத்திக் கொள்ள முடியும். மலையாளத்தில் என்னுடைய படங்களை முடித்த பிறகு தான் ஹிந்தி ரீமேக் பற்றி முடிவு செய்ய இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.