பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

திரையுலகை சேர்ந்தவர்கள் அவ்வப்போது பல்வேறு விமான பயணங்களை மேற்கொண்டு வந்தாலும் அடிக்கடி இதுபோன்ற பிரபலங்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாவது என்னவோ ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சேவை தான். அந்த வகையில் லேட்டஸ்டாக பிரபல சிதார் இசை கலைஞர் ரவிசங்கரின் மகளான அனோஷ்கா சங்கர் தன்னுடைய சிதார் இசைக்கருவியை ஏர் இந்தியா விமான சேவை சேதப்படுத்தி விட்டது என்று சோசியல் மீடியாவில் ஒரு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கிட்டத்தட்ட 1000 விமான பயணங்களில் என்னுடைய உற்ற நண்பனாக பயணித்த இந்த சிதார் கருவியை ஏர் இந்தியா விமான நிறுவனத்தினர் கவனமின்மையுடன் கையாண்டதால் இது உடைந்து சேதம் அடைந்துள்ளது. இத்தனைக்கும் இதன் பாதுகாப்புக்காக சிறப்பு கட்டணம் வேறு செலுத்தி இருந்தேன். இத்தனை வருடங்களில் ஏர் இந்தியாவில் நான் பயணிப்பது இதுதான் முதல் முறை. இந்த முதல் முறையிலேயே இப்படி ஒரு மோசமான அனுபவத்தை எனக்கு ஏர் இந்தியா கொடுத்து விட்டது” இன்று தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் அனோஷ்கா சங்கருக்கு ஆதரவாக ஏர் இந்தியா நிறுவனத்தின் சேவைக்கு எதிராக தங்களது கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.